About Me

My photo
'Sank' in 'er(r's)'.. I stand for Stupidity, Sorrow, Smartness, Sexy, Seriousness, and what not.. Sankar = Error (Wow it is poetic! Ya it does rhyme) And That is me....:)

Wednesday, October 7, 2015

என்னில் பாதியாய்
நீ தொடங்கி
உன்னில் பாதியாய்
நான் முடிகிறேன் 

Sunday, September 6, 2015

நம் பெயரின் 
எழுத்துக்கள் சமமாக (ச க )
நான் குறுகி 
நீ நெடிய நட்பாக (ச கா )
நான் நெடிந் துனை 
குறுக்கி  மாண்டுவிட்டால் (சா க )
நம்மை நெடித்து 
பாடாரோ நம் வாழ்வை  
பிறர் இப்புவியிலே என்றும் 
நிலைத்து (சா கா )

Sunday, August 15, 2010

காதலன்:-

ஓர் வார்த்தையில்
கவிதை எழுதவேண்டும்
என்று என்னும்போது

பலர்
பலரது பெயரை
எழுதிவிட்டார்கள்

சிறிது
முன்கூட்டி பிறந்திருந்தால்
உன்பெயரை நான்
முதலாய் எழுதி இருப்பேன்

இனி நான்
என்ன செய்ய
விடை கூறு

காதலி:-

கண்டதும் காதல்
கொண்டதும் முத்தம்
வந்தது கூடல்
கொண்டது சாடல்
என
பட்டியல் நீண்டு கொண்டே
போகும் நம் காதலை
ஓர் வார்த்தையில்
அடைபாயா என்ன...

விட்டுவிடு அன்பே
நம் காதலை
கவிதை என்னும்
சமாதியில் புதைக்காதே...

Saturday, June 19, 2010

நிகழ்காலம்

கடந்த காலத்தோடு
ஊடல் கொண்டு...
கூட மறந்தேன்
உன்னுடன்...

இன்று எதிர்காலம்
மலடாகி என்னை
ஏலனம் செய்கின்றது..

Tuesday, March 16, 2010

பசலை..


மெத்தையில் நான்கிடக்க- எனைச்சுற்றி
இருளன் படர்ந்திருக்க
கண்ணுக்கு புலப்படாத கள்வன்
மெல்ல வருடிவிட்டான்
உறக்கம் கலைத்துவிட்டான்
எனை ஏனோ உசுப்பிவிட்டான்
இதழ்களை கேஞ்சவைதான்
கரங்களில் தலையணை தன்துவைத்தான்
அருகில் அவனோ இல்லை
தனிமை இந்த பெண்மைக்கு தொல்லை
பகலவனே பகலவனே
அவன் சற்று அயரும் வேளையில்
உனது கதிர்களை தூது அனுப்பி
என் நிலையை நீ உணர்த்து
அவன் சிந்தும் வியர்வைதான்
என் கண்ணீருக்கு காரணம் என்று..

Monday, March 15, 2010

காதல் காவியம்... (Love story)


மாலையிலே இன்ப வேளையிலே
அழகு சோலையிலே- ஒரு காளை
அவன் தேடி வந்தான் காதல் ஓலை

ஓலையிலே ஒரு பாட்டெழுதி அந்த
பாவையிடம் கேட்டான் அன்பை
அவள் அடைத்துக்கொண்டால் வேலி கம்பை

காகிதத்தால் ஒரு அம்பு செய்து
அதை காற்றினிலே செலுத்திவிட்டான்
அந்த பெண்மனதை கலைத்துவிட்டான்

அவள் பார்வையிலே பல பாசைகள்
பேசிட, புரியாமல் எண்ணி தவித்தான்
தினம் உறக்கம் தணை தவிர்த்தான்

மனிதுளியளவு காலம் தாமதிப்பினும்
அவன் வரவை எண்ணி தவித்தாள்
சில ஊடலுக்கு பின் மனம் சிறுத்தாள்

விதைக்குள் இருந்த ஆலமரமானது
வேர் விட்டு வளர்ந்திட கண்டேன்
அதில் விழுதுகள் தோன்றிட கண்டேன்

ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டிய
புனிதமான அந்த காதல்- கண்டு
வீட்டுக்குள் தோன்றியது மோதல்

வாழ வழியுமின்றி, அருகில் அவனும்
இன்றி துறந்தாள் தன் உயிரை- நான்கடி
தூக்கு கயிறில்

சாவினிலும் ஒன்று சேரவில்லை என்றெண்ணி
திரிந்தான் பித்து பிடித்து- உடலில்
உயிர் மடித்து

தாடி கொண்டான், மது ஜாடி கொண்டான்
கையில் பீடி கொண்டான் தன் துணையாய்
அவை ஆனது அவனுக்கு வினையாய்

காதலியின் முகம் நினைவில் சுமந்து
தன்னுடனே பிற துணையும் சுமந்து
தேடுகிறான் இவன் வாழ்வை- கல்லறையில்
அந்த பாவை....

தனிமை (Loneliness)


உன் பாதம்
என் வழியை
அழகாய் தொடரும்போது
நான் அறிந்தேன்
என் தனிமை
ஒரு மாயை என்று...