காதலன்:-
ஓர் வார்த்தையில்
கவிதை எழுதவேண்டும்
என்று என்னும்போது
பலர்
பலரது பெயரை
எழுதிவிட்டார்கள்
சிறிது
முன்கூட்டி பிறந்திருந்தால்
உன்பெயரை நான்
முதலாய் எழுதி இருப்பேன்
இனி நான்
என்ன செய்ய
விடை கூறு
காதலி:-
கண்டதும் காதல்
கொண்டதும் முத்தம்
வந்தது கூடல்
கொண்டது சாடல்
என
பட்டியல் நீண்டு கொண்டே
போகும் நம் காதலை
ஓர் வார்த்தையில்
அடைபாயா என்ன...
விட்டுவிடு அன்பே
நம் காதலை
கவிதை என்னும்
சமாதியில் புதைக்காதே...