About Me

My photo
'Sank' in 'er(r's)'.. I stand for Stupidity, Sorrow, Smartness, Sexy, Seriousness, and what not.. Sankar = Error (Wow it is poetic! Ya it does rhyme) And That is me....:)

Monday, March 15, 2010

காதல் காவியம்... (Love story)


மாலையிலே இன்ப வேளையிலே
அழகு சோலையிலே- ஒரு காளை
அவன் தேடி வந்தான் காதல் ஓலை

ஓலையிலே ஒரு பாட்டெழுதி அந்த
பாவையிடம் கேட்டான் அன்பை
அவள் அடைத்துக்கொண்டால் வேலி கம்பை

காகிதத்தால் ஒரு அம்பு செய்து
அதை காற்றினிலே செலுத்திவிட்டான்
அந்த பெண்மனதை கலைத்துவிட்டான்

அவள் பார்வையிலே பல பாசைகள்
பேசிட, புரியாமல் எண்ணி தவித்தான்
தினம் உறக்கம் தணை தவிர்த்தான்

மனிதுளியளவு காலம் தாமதிப்பினும்
அவன் வரவை எண்ணி தவித்தாள்
சில ஊடலுக்கு பின் மனம் சிறுத்தாள்

விதைக்குள் இருந்த ஆலமரமானது
வேர் விட்டு வளர்ந்திட கண்டேன்
அதில் விழுதுகள் தோன்றிட கண்டேன்

ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டிய
புனிதமான அந்த காதல்- கண்டு
வீட்டுக்குள் தோன்றியது மோதல்

வாழ வழியுமின்றி, அருகில் அவனும்
இன்றி துறந்தாள் தன் உயிரை- நான்கடி
தூக்கு கயிறில்

சாவினிலும் ஒன்று சேரவில்லை என்றெண்ணி
திரிந்தான் பித்து பிடித்து- உடலில்
உயிர் மடித்து

தாடி கொண்டான், மது ஜாடி கொண்டான்
கையில் பீடி கொண்டான் தன் துணையாய்
அவை ஆனது அவனுக்கு வினையாய்

காதலியின் முகம் நினைவில் சுமந்து
தன்னுடனே பிற துணையும் சுமந்து
தேடுகிறான் இவன் வாழ்வை- கல்லறையில்
அந்த பாவை....

No comments:

Post a Comment