About Me

My photo
'Sank' in 'er(r's)'.. I stand for Stupidity, Sorrow, Smartness, Sexy, Seriousness, and what not.. Sankar = Error (Wow it is poetic! Ya it does rhyme) And That is me....:)

Tuesday, March 16, 2010

பசலை..


மெத்தையில் நான்கிடக்க- எனைச்சுற்றி
இருளன் படர்ந்திருக்க
கண்ணுக்கு புலப்படாத கள்வன்
மெல்ல வருடிவிட்டான்
உறக்கம் கலைத்துவிட்டான்
எனை ஏனோ உசுப்பிவிட்டான்
இதழ்களை கேஞ்சவைதான்
கரங்களில் தலையணை தன்துவைத்தான்
அருகில் அவனோ இல்லை
தனிமை இந்த பெண்மைக்கு தொல்லை
பகலவனே பகலவனே
அவன் சற்று அயரும் வேளையில்
உனது கதிர்களை தூது அனுப்பி
என் நிலையை நீ உணர்த்து
அவன் சிந்தும் வியர்வைதான்
என் கண்ணீருக்கு காரணம் என்று..

No comments:

Post a Comment