About Me

My photo
'Sank' in 'er(r's)'.. I stand for Stupidity, Sorrow, Smartness, Sexy, Seriousness, and what not.. Sankar = Error (Wow it is poetic! Ya it does rhyme) And That is me....:)

Thursday, November 19, 2009

வெற்றியும் தோல்வியும் (Success and Failure)

வெற்றியும் தோல்வியும்
வாழ்க்கை சக்கரத்தின் கம்பிகள்
மேலும், கீழுமாய் வட்டமடிக்கும்.

அவை காலத்தின்
பெண்டுலங்கள்
முன்னும் பின்னுமாய் ஊசலாடும்.

அவை புகழின் மாயைகள்
கண்முன்னே
தோன்றி பின் மறையும்.

அவை உயிரின் மூலதனம்
நம்மோடு வாழ்ந்து
மண்ணோடு முடியும்.

அவை நண்பன், பகைவன்
முறையே நம்முள்
தோற்றுவிக்கும்.

அவை அன்பும், விரோதமும்
ஒன்றிற்கொன்று
வளர்த்துக்கொள்ளும்

அவைதான்
வாழ்வையும், சாவையும்
உறுதி செய்யும்.

எனவே தோல்வியை
மனதில் கொள்ளாமல், நினைவில்கொள்
வெற்றி காண்பாய்.

வெற்றியை
நினைவில் கொள்ளாமல், மனதில்கொள்
தோல்வி தவிர்ப்பாய்.


வாழ்வில் வளம் பெற்றிட
வெற்றி தோல்வியை
உன் வசப்படுத்திடு

உயிர் வளர்த்திடு
வெறுமை மறந்திடு - பின்
உலகை துறந்திடு

No comments:

Post a Comment