About Me

My photo
'Sank' in 'er(r's)'.. I stand for Stupidity, Sorrow, Smartness, Sexy, Seriousness, and what not.. Sankar = Error (Wow it is poetic! Ya it does rhyme) And That is me....:)

Saturday, November 21, 2009

நீயில்லா நாட்கள் (Days without you)


முகத்திலே மலரை கண்டேன்
மதிலிலே காம்பை கண்டேன்
இடை இல்லை தேடி நின்றேன்- இளங்குயிலே

முகில் வந்து போனபின்னே
நிலம் எல்லாம் காய்ந்தபின்னே
தனிமையில் நானிருந்தேன்- கவிக்குயிலே

உன்னை இன்று பிரியும்முன்னே
மனதிலே வெறுமை கொண்டேன்
கனவின்றி அமைதியுற்றேன்- பொன்மணியே

காதல் செய்த பாவம் என்ன
மோதல் வந்து போனதென்ன
நீயுமென்ன நானுமென்ன விளங்கலையே

உனக்கென காத்திருப்பேன்
தனிமையை நான் ரசிப்பேன்
கவிகொண்டு அதை துதிப்பேன்- கண்மணியே

வந்து உந்தன் கரம் தருவாய்
விழி கொண்டு உயிர்தருவாய் நீ
எனைவந்து சேரும் நாட்கள் தெரிகிறதே..

No comments:

Post a Comment